1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 26 மார்ச் 2015 (15:28 IST)

பூமிக்கு அருகில்வரும் ராட்சத விண்கல்: 5,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்

ராட்சத விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்ல உள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
 
அந்த விண்கல் மணிக்கு 23,000 கிமீ வேகத்தில் பூமியைக் கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விண்கல் சுமார் 1,000 மீட்டர் அகலம் கொண்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த விண்கல்லுக்கு "2014ஒய்.பி" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த விண்கல் பூமியின் 28 லட்சம் மைல்களைக் கடந்து பயணிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
விண் கற்கள் அவ்வப்போது பூமியைக் கடந்து செல்வது வாடிக்கையாக நிகழ்வதுதான் என்றாலும், இந்த அளவு பெரிய விண்கல் பூமியைக் கடப்பது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
23,000 கிமீ வேகத்தில் வரும் இந்த விண்கல் பூமியில் மோதினால் ஒரு நாட்டையே அழித்துவிடக்கூடிய அளவுக்கு அதன் தாக்கம் இருக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.