1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 22 மார்ச் 2017 (17:34 IST)

ஓகே என்னை பலாத்காரம் செய்ய போறாங்க: தன்னை தயார்படுத்திக்கொண்ட நடிகை

மூகமுடி கொள்ளையர்கள் தன்னை பலாத்காரம் செய்ய போகிறார்கள் என நினைத்து மனதளவில் தன்னை தயார்படுத்தியதாக பிரபல நடிகை கிம் கர்தாஷியன் தெரிவித்துள்ளார்.


 

 
அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகையான கிம் கர்தாஷியன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு சென்றார். அங்கு ஹோட்டல் அறைக்குள் இருந்த அவரிடம் முகமூடி கொள்ளையர்கள் விலை உயர்ந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
 
இதுகுறித்து அவர் தற்போது கூறியிருப்பதாவது:-
 
கொள்ளையர்களின் கையில் துப்பாக்கியை பார்த்து பயந்தேன். அவர்களிடம் இருந்து தப்பித்து ஒடுவதா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தேன். தப்பித்து ஓடினால் கண்டிப்பாக சுட்டு விடுவார்கள். அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். 
 
அப்போது கொள்ளையர்களில் ஒருவன் என் வாயில் டேப்பை வைத்து ஒட்டிவிட்டான். ஓகே என்னை பலாத்காரம் தான் செய்யப் போகிறார்கள் என நினைத்து மனதளவில் என்னை நானே தயார்படுத்திக் கொண்டேன். நல்லவேளையாக அவர்கள் என்னை ஒன்றும் செய்யவில்லை, என கூறியுள்ளார்.