செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 மே 2025 (12:55 IST)

குழந்தைகள் சாப்பிடும் இனிப்பு மிட்டாய்களில் கஞ்சா கலப்பா? - அதிர்ச்சி தகவல்!

Haribo candies

உலகம் முழுவதும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மிட்டாய் நிறுவன தயாரிப்புகளில் கஞ்சாவில் காணப்படும் போதைப் பொருள் கண்டறியப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு குழந்தைகளுக்கான விதவிதமான இனிப்பு மிட்டாய்களை தயாரிக்கும் நிறுவனம் Haribo. இந்த நிறுவனத்தின் மிட்டாய்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் விற்பனையாகி வருகிறது. அவ்வாறாக நெதர்லாந்தில் சமீபத்தில் ஹரிபோவின் ‘ஹேப்பி கோலா’ என்ற வகை மிட்டாய்களை சில குழந்தைகள் வாங்கி சாப்பிட்டபோது மயக்கம் தரும் உணர்வு ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.

 

இதனால் சிறுவர்கள் வாங்கிய அந்த மிட்டாய்களை ஆய்வு செய்த போது கஞ்சாவில் உள்ள மயக்கம் ஏற்படுத்தும் போதைப்பொருளின் கலவை அந்த மிட்டாயிலும் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஹரிபோ நிறுவனம் அந்த ஹேப்பி கோலா தயாரிப்புகளை மொத்தமாக கடைகளில் இருந்து திரும்ப பெற்றுள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மிட்டாயில் போதைக் கலவை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K