வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 23 ஜூலை 2018 (15:18 IST)

சிங்கத்தின் வாலா? ஈரான் அதிபருடன் மள்ளுக்கட்டும் டிரம்ப்!

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்று கூறி வந்த நிலையில் கடந்த மே மாதம் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்தார்.
 
மேலும் ஈராக் மீது பல பொருளாதார தடைகளை விதித்ததோடு, அந்நாட்டிடம் இருந்து அமெரிக்க நட்பு நாடுகள் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்றும், அதனை நிறுத்திக்கொள்ளவும் நவம்பர் மாதம் வரை காலக்கெடு விதித்துள்ளார்.  
 
இந்நிலையில், ஈரான் அதிபர் ஹஸன் ரவுஹானி, ஈரானுடன் போரிட அமெரிக்கா நினைத்தால் அது இதுவரை இல்லாத அளவு மிக மோசமான போராக மாறும். இதுவரை நடந்த போருக்கெல்லாம் தாய் போராக அது இருக்கும். சிங்கத்தின் வாலை பிடித்து விளையாடாதீர்கள், மிஸ்டர் ட்ரம்ப். இதன் விளைவு வருத்தத்தில் போய் முடியும் என எச்சரித்தார். 
 
ஆனால், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அமெரிக்காவை அச்சுறுத்த நினைத்தால், வரலாறு இதுவரை கண்டிராத பேரழிவை ஈரான் சந்திக்க நேரிடும். ஈரானின் மிரட்டல்களை கேட்டுக்கொண்டு நீண்டகாலம் அமெரிக்கா அமைதியாக இருக்காது என்று பதிவிட்டுள்ளார்.