திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2025 (10:36 IST)

இன்ஸ்டாகிராமில் புதிய அசத்தலான அப்டேட்.. ரீல்ஸ் வீடியோ பதிவு செய்பவர்கள் குஷி..!

இன்ஸ்டாகிராம், உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாகும். இதுவரை 90 வினாடிகள் மட்டுமே ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்ற நிலையில், இனி 180  வினாடிகள், அதாவது 3 நிமிடங்களுக்கு ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்யலாம் என இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. இதனால் இன்ஸ்டாகிராம் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரீல்ஸ் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களும், அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், இனிமேல் இன்ஸ்டாகிராமில் மூன்று நிமிடங்களுக்கு ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்யலாம் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேபோல், இதுவரை ஒரே நேரத்தில் 10 புகைப்படங்களை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது அதன் எண்ணிக்கையை 20 ஆக மெட்டா நிறுவனம் இதனை உயர்த்தியுள்ளது. இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது வேறு லெவலில் பயனாளிகளுக்கு பல்வேறு வசதிகளை அளித்து வருகின்றன. அந்த போட்டியை சமாளிப்பதற்காக இன்ஸ்டாகிராம் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது

Edited by Mahendran