ஏர் இந்தியா விமானங்களுக்கு தடை! – ஹாங்காங் அறிவிப்பால் அதிர்ச்சி!

Prasanth Karthick| Last Modified திங்கள், 21 செப்டம்பர் 2020 (08:17 IST)
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஏர் இந்திய விமானங்கள் ஹாங்காங் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச விமான போக்குவரத்துகள் மெல்ல தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஹாங்கங் நாட்டிற்கு வந்த 21 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு பயணிகள் ஏர் இந்தியா விமான சேவை மூலம் ஹாங்காங் வந்துள்ளனர்

இதனால் அக்டோபர் 8 வரை ஹாங்காங் வர ஏர் இந்தியா விமானங்களுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏர் இந்தியா விமானத்தில் ஹாங்காங் செல்ல புக்கிங் செய்திருந்த பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :