விழா மேடையில் ட்ரம்பை கேலி செய்த பிரபல நடிகர்
ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம்மி கிம்மல் அதிபர் டொனால்டு ட்ரம்பை கேலி செய்துள்ளார்.
அமெரிக்காவின் உலக புகழ்பெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைப்பெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு நடைப்பெறும் விருந்து விழாவுக்கு பதிலாக கடந்த சனிக்கிழமை அதிபர் ட்ரம்புக்கு எதிராக ஹாலிவுட் நட்சத்திரங்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அமெரிக்க அதிபர் எப்போதும் தன்னை ஹாலிவுட் சினிமாவுக்கு எதிரானவராக காட்டி கொண்டு வருகிறார். இதனால் ஹாலிவுட் பட உலகினர் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து அஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொண்ட பிரபல நடிகர் ஜிம்மி கிம்மல் விழா மேடையில் ட்ரம்பை கிண்டல் செய்தார். ஜிம்மி மேடையில் அனைவரும் முன்னிலையில் தன் மொபைலில் ட்ரம்புக்கு லைவ் டூவிட் செய்தார். அது பெரிய திரையில் காட்டப்பட்டது.
அதில், எப்போதும் டுவிட்டரில் அதிக நேரம் செலவிடும் ட்ரம்ப் ஆஸ்கர் பற்றி பேசாதது ஏன்? ட்ரம்ப் இருக்கிறீர்களா? என டூவிட் செய்தார்.