செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2016 (15:24 IST)

ரஷ்ய அதிபர் என்னை பழிவாங்கிவிட்டார்: ஹிலாரி காட்டம்!!

அதிபர் தேர்தலில் தோற்றதற்கு ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் ஒரு  காரணம் என்று ஹிலாரி க்ளிண்டன் குற்றம் சாட்டியுள்ளார். 


 
 
தனி சர்வர் உபயோகித்த விவகாரத்தில், தேர்தலுக்கு முந்தய வாரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பி கோமி, தேர்தலை திசை திருப்பினார். 
 
ரஷ்யாவில் புடினின் சகாக்கள் அவரிடம் கோபம் கொண்டதற்கு என்னை குற்றம் சாட்டினார். அப்போது சொன்னதைப் போல் இப்போது பழிவாங்கி விட்டார். என்னை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே மறைமுக சதித்திட்டம் தீட்டி ஹேக்கர்கள் மூலம் ஜனநாயகக் கட்சியினரின் சர்வர்கள், இமெயில்கள் ஹேக் செய்யப்பட்டன. 
 
திருடப்பட்ட தகவல்களை எப்படி திரித்து மக்களிடம் கொண்டு செல்வது என்பதை புடின் தனது நேரடி கண்காணிப்பில் செயல்படுத்தியுள்ளார் என ஹிலாரி தெரிவித்துள்ளார்.