வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 4 மே 2017 (22:34 IST)

காதலியின் படுக்கையில் கள்ளக்காதலன்: செல்பி எடுத்த உண்மை காதலன்

டஸ்டன் என்பவர் கடந்த சில வருடங்களாக ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். இருவரும் ஒரே வீட்டில் கடந்த சில மாதங்களாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தான் வீட்டில் இல்லாத போது வேறு ஒரு ஆண் தன்னுடைய வீட்டிற்கு வந்து செல்வது குறித்து கேள்விப்பட்டார்.



 


இதை உறுதி செய்ய ஒருநாள் வெளியூர் செல்வதாக கூறிவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது காதலி படுக்கையில் கள்ளக்காதலனுடன் தூங்கி கொண்டிருந்தார். உடனே டஸ்டன் தன்னுடைய மொபைல் கேமிராவை ஆன் செய்து ரொம்பவும் கூலாக, அவர்களை புகைப்படம் எடுத்தும், அவர்களுடன் செல்ஃபியும் எடுத்துள்ளார். எடுத்த புகைப்படங்களை ஃபேஸ் புக்கில் பதிவேற்றி வைரல் ஆக்கினார் டஸ்டன்.

செல்பி புகைப்படத்திற்கு கீழே, 'வேறு ஒரு ஆணுடன் வீட்டிற்கு வந்து படுக்கையில் உறங்கி கொண்டிருந்த போது உன் காதலனுடன்” என்று ஃபோட்டோவுக்கு ஸ்டேட்டஸ் தட்டியிருந்தார். அதுமட்டுமின்றி நல்ல ஆண்களுக்கு நல்ல பெண்கள் கிடைப்பார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

டஸ்டன் ஸ்டேட்டஸை கண்ட நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிய துவங்கிவிட்டனர். வித்தியாசமான முறையில் காதலியை டஸ்டன் பழிவாங்கி இருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டி தள்ளிவிட்டனர். ஒருசிலர் மட்டும் இந்த செயல் தவறானது என்றும் டஸ்டனுக்கு செய்தி அனுப்பியுள்ளனர்.