1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 26 ஜூலை 2016 (13:37 IST)

மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது: ஜெர்மன் மருத்துவர்கள்

ஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற்றும் மருத்துவ டாக்டர்கள் இணைந்த குழு மருத்துவபரிசோதனை மூலம் மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது என நிரூபிக்கபட்டு உள்ளதாக அறிவித்து உள்ளனர்.


 

 
மரணம்தான் இறுதியானது. மறு பிறவி என்பதோ சொர்க்கம்-நரகம் என்பது கிடையாது.மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே.மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையானது. கட்டுக்கதை அது. மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள்  என்று பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் ஜெர்மன் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற்றும் மருத்துவ டாக்டர்கள் இணைந்த குழு மருத்துவபரிசோதனை மூலம் மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது என நிரூபிக்கபட்டு உள்ளதாக அறிவித்து உள்ளனர்.
 
கடந்த சில வருடங்களில், ஆட்டோ பல்ஸ் என்ற கருவி மூலம் மரணித்த சிலரை உயிர்ப்பிக்க செய்யும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், அனைத்து வாக்குமூலங்களிலும் மரண நிலையில் உள்ள நினைவுகள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன. 
 
அவற்றில் பொதுவாக, உடலில் இருந்து பிரிவது போன்ற உணர்வு கொண்ட நினைவுகள், தெய்வீக ஆற்றலால் மிதத்தல் உணர்வு, முழுவதும் அமைதி நிலை, பாதுகாப்பு, வெப்பமுடன் இருத்தல், மரண நிலையிலான முழு அனுபவம் மற்றும் அதிக அளவிலான ஒளி காணப்படுவது போன்றவை பெருமளவில் உள்ளன.
 
இதைக்கொண்டு மரணத்திற்கு பிறகு மறு வாழ்வு வேறு வடிவில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.