புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2017 (06:01 IST)

டொனால்டு டிரம்ப் - ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் சந்திப்பு திடீர் ஒத்திவைப்பு ஏன்?

ஜெர்மனி பெண் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு நாளை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த சந்திப்பு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



 


அமெரிக்க நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியை நோக்கி பெரும் பனி புயல் ஒன்று நெருங்கி வருகிறது. எனவே இதுகுறித்த பாதுகாப்பு பணியில் டிரம்ப் பிசியாக இருப்பதால் ஜெர்மனி அதிபருடனான இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் இதுகுறித்து ஏஞ்சலா மெர்க்கலிடம் நேரடியாக தொலைபேசியில் பேசியதாகவும், அமெரிக்க அதிபரின் சூழ்நிலையை புரிந்து கொண்ட ஏஞ்சலா மெர்கல் ஒத்திவைப்புக்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சந்திப்பு வரும் 17-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.