திருமணத்திற்கு முன் கர்ப்பம்: கைது செய்யப்பட்ட காதல் ஜோடி


sivalingam| Last Modified செவ்வாய், 28 மார்ச் 2017 (04:01 IST)
அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியில் திருமணத்திற்கு முன் கர்ப்பமாவது சட்டப்படி குற்றம். இந்த சட்டம் உள்நாட்டினர்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து வேலைக்கு வருபவர்களுக்கும் பொருந்தும்


 


இந்நிலையில் தென்னாப்பிரிக்காவை எம்லின் என்பவரும் உக்ரைன் நாட்டை சேர்ந்த இலினா என்பவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தனர். நாளடைவில் இருவருக்கும் காதல் மலர்ந்து அது பின்னர் உடலுறவு வரை சென்றது., இதனால் இலினா கர்ப்பமானார்

இதுகுறித்து மருத்துவரிடம் காதல் ஜோடி ஆலோசனை செய்தபோது சிகிச்சை செய்ய வேண்டிய மருத்துவர், அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் போலீசில் பிடித்து கொடுத்தார். தற்போது இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் பல ஆண்டுகள் சிறையாம்


இதில் மேலும் படிக்கவும் :