1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 22 ஜனவரி 2020 (20:44 IST)

ஈட்டி போன்று சிறுவனின் கழுத்தில் பாய்ந்த மீன் ...

இந்தோனேஷியா நாட்டில் பெற்றோருடன் கடலில் மீன் பிடிக்கச் சென்ற சிறுவனின் கழுத்தில் மீன் ஒன்றி பாய்ந்தது. அதனால் சிறுவன் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தோனேஷியா நாட்டில் வசித்து வருபவர் முகமது இதுல் ( 1). இவர் தனது பெற்றோருடன் மீன் பிடிக்க கடலுக்குள்  சென்றுள்ளார்.
 
அப்போது கூர்மையான வாய் பகுதி கொண்ட ஒரு மீன் மணிக்கு 60 கி.,மீ வேகத்தில் சிறுவனின் கழுத்தில் பாய்ந்து. கழுத்தை துளைத்துக் கொண்டு மறுமக்கம் வெளியேறியது.
பின்னர், சிறுவனை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் போராடி 2 மணி நேரத்திற்கு பிறகு மீனை அகற்றினர்.தற்போது முகமது சிகிச்சை பெற்றுவருவதாக செய்திகள் வெளியாகிறது.