ஃபேஸ்புக்கில் அறிவித்துவிட்டு தற்கொலை செய்த மாடல் அழகி
பெண் மாடல் அழகி ஒருவர் ஃபேஸ்புக்கில் அறிவித்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக வங்கதேச காவல் துறையினர் கூறியுள்ளனர்.
21 வயதான சபிரா ஹுசைன் என்ற பெண் சமூக வலைத்தளங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கில் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அறிவித்து வீடியோவை பதிவிட்டுள்ளார். இவர், மோகனா மற்றும் கன்பங்க்ளா ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களில் விற்பனை நிர்வாகியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
சபிரா ஹுசைன் வெளியிட்டுள்ள வீடியோவில், கையில் கத்தியுடன் காணப்படுகிறார். தான் ஒரு நபரால் பாலியல் அடிமை போல நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். மேலும், தனது காதலன் ’ரோனாக்’ இல்லாமல் இந்த உலகத்தில் வாழ விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த மாடல் அழகி டாக்கா பகுதியில் இருந்த தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டார்.
இது குறித்து அவரது தாயார், ருப்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், சபிரா ஹுசைன் காதலர் ரூப்னிக்கை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அந்த நபர் ஒரு புகைப்பட கலைஞர் என அடையாளம் கண்டுள்ளனர்.