திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 26 மே 2017 (04:05 IST)

மன்மோகன் சிங் மரணமா? இலங்கை அமைச்சரின் டுவீட்டால் பரபரப்பு

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சின் மரணம் என இலங்கை அமைச்சர் ஒருவரின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பக்கம் அந்த அமைச்சரின் பெயரில் தொடங்கப்பட்ட போலியான பக்கம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



 


இலங்கை வெளியுறவு அமைச்சர் ரவி கருனநாயகே பெயரில் பல போலி டுவிட்டர் பக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்றில் நேற்றிரவு இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணமடைந்ததாக டுவிட் செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி அந்த டுவீட்  அந்நாட்டு வெளியுறவு செய்தி தொடர்பாளரை டேக் செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து தனது கவனத்திற்கு வந்ததும் அதிர்ச்சியடைந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரவி அந்நாட்டு சி.ஐ.டி போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதனையடுத்து, அந்த குறிப்பிட்ட டுவீட் உடனடியாக நீக்கப்பட்டு இந்த விஷம செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் சில மணி நேரம் இந்தியா மற்றும் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.