1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2016 (10:15 IST)

சிவப்பு கம்பல வரவேற்புடன் இங்கிலாந்து: ஏற்பாரா டிரம்ப்!!

அமெரிக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்புடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள்ளும் பொருட்டு ராணி எலிசபெத்தை சந்திக்க வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 
 
அமெரிக்காவின் 45-வது அதிபராக தேரந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம் வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி பதவியேற்க உள்ளார். அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் இங்கிலாந்தாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கருதுகின்றனர்.
 
அதன்படி இங்கிலாந்து ராணி எலிசபெத்தை வரும் கோடை காலத்தில் சந்திக்க வருமாறு ட்ரம்புக்கு அழைப்பு விடுக்க இங்கிலாந்து அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கவும் தீர்மானித்துள்ளனர். 
 
இதற்காக இங்கிலாந்து அதிகாரிகள் குழு அமெரிக்க அதிகாரிகளிடம் விரைவில் பேச்சு நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் 2017-ம் ஆண்டு ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் டொனால்டு ட்ரம்பை இங்கிலாந்துக்கு வரவழைக்க அவர்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்புக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் அலுவல் ரீதியாக பாராட்டு அனுப்பினார். 
 
மேலும், இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரப் பூர்வமாக வெளியேறும் நாளைக் காண தாம் ஆவலுடன் காத்திருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.