ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 9 ஏப்ரல் 2018 (11:09 IST)

ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு

ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் ஷிமேனோவின் கடலோர பகுதியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.
 
இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஜப்பான் வானிலை ஆய்வு கழகம் தெரிவிக்கவில்லை. மேலும் சில நாட்களில் ஷிமேன் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.