வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 3 நவம்பர் 2014 (16:55 IST)

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மனிதர்களே காரணம் - ஐ.நா. அறிவிப்பு

பருவநிலை மாற்றம் மற்றும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மனிதர்களே காரணம் என ஐ.நாவின் பருவநிலை மாற்றத்திற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
 
சமீபத்தில் பருவநிலை மாற்றம் குறித்து 4ஆவது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மாசு வெளியேற்றம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பூஜ்யமாக குறைக்கப்பட்டால் மட்டுமே, பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் என வல்லுனர் குழு தெரிவித்துள்ளது. மாசு வெளியேற்றம் குறைக்கப்படாவிட்டால் மீள முடியாத பாதிப்புகளை மனித குலம் சந்திக்க வேண்டி இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அறிக்கையை வெளியிட்டு பேசிய ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன், சர்வதேச சமூகம் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.