துபாயில் செயற்கை மலை
வெப்பத்தை தாக்குப்பிடிக்க துபாயில் செயற்கை மலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரேபிய நாடுகளில் கடந்த பல மாதங்களாக வெப்பத்தின் அளவு அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் அங்கு இயற்கை வளங்களும், நீர் வளம், விளைநிலங்கள் வறண்டு காணப்படுவதால் உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இந்நிலையை கட்டுக்குள் கொண்டு வர ஐக்கிய அரேபிய நாடுகள் செயற்கை மலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. மலையை உருவாக்கினால் மழை பெய்யும் எனவும், இதன்மூலம் வெப்பத்தின் தக்கத்தை கட்டுப்படுத்தலாம் எனவும் கருதப்படுகிறது.
செயற்கை மலை அமைக்கும் முழு பொறுப்பையும் அமெரிக்க சுற்றுப்புறச் சூழல் ஆய்வு பல்கலைகழக நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த குழு எந்த இடத்தில் அமைக்கலாம் என்று ஆய்வு செய்து வருகிறது.
இதையடுத்து செயற்கை மலை அமைக்க முதற்கட்ட பணிக்கு 2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் மழைப் பெறுவதற்காக தான் இந்த செயற்கை மலை திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செயற்கை மலை அமைக்கும் திட்டம் அனைவரையும் வியப்பில் தள்ளியது.