அமெரிக்காவின் மோசமான அதிபர் டிரம்ப்: ரிபோட் வெளியீடு!
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைகழக பேராசியர்கள் இணைந்து அமெரிக்காவின் சிறந்த அதிபர்கள் யார் என அரசியல் தலைவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினர். அதன் முடிவுகள் பின்வருமாறு....
சுமார் 170 அரசியல் பிரமுகர்களிடன் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கலந்து கொண்ட அரசியல்வாதிகளில் 57% பேர் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள், 13% குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள், 27% சதவீதம் சுயேட்சை அரசியல்வாதிகளும் ஆவர்.
ஒவ்வொரு அதிபர்களுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அரசியல்வாதிகள் வாக்களித்தனர். அதன் முடிவுகள் இதோ...
சிறந்த 5 அதிபர்கள்:
1. ஆபிரஹாம் லிங்கன்
2. ஜார்ஜ் வாஷிங்டன்
3. பிராங்ளின் டிலானோ ரூஸ்வெல்ட்
4. தியோடர் ரூஸ்வெல்ட்
5. தாமஸ் ஜெபர்சன்
செயல்பாட்டில் மோசமான 5 அதிபர்கள்:
1. டொனால்ட் டிரம்ப்
2. ஜேம்ஸ் புக்காணன்
3. வில்லியம் ஹென்றி ஹாரிசன்
4. பிராங்க்ளின் பியர்ஸ்
5. ஆன்ட்ரூ ஜான்சன்