1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 25 ஜூலை 2017 (19:29 IST)

டயானாவிற்கு இத்தனை காதலர்களா? அதிர்ச்சி தரும் ஆவணப்படம்!!

இளவரசி டயானா கடந்த 1997 ஆகஸ்ட் 31 ஆம் தேதி கார் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். டயானா மரணமடைந்து 20 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் அவரை பற்றிய ஆவணப்படம் ஒன்று தயாராகியுள்ளது.


 
 
Diana, Our Mother: Her Life and Legacy என்ற பெயரில் இந்த ஆவணப்படத்தை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் டயானா குறித்து அவர் மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி பேசியுள்ளனர்.
 
இதனிடையில், இந்த ஆவணப்படத்தின் மூலம் டயானாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. 
 
சார்லசுக்கும் டயானாவிற்கும் 1996 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது. திருமண பந்தத்தில் இருந்த போதும் விவாகரத்துக்கு பின்னரும் டயானாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்துள்ளது.
 
பிரபல இசை கலைஞர் Bryan Adams,  ரக்பி விளையாட்டு வீரர் Will Carling, குதிரைப்படை அதிகாரியான James Hewitt, Oliver Hoare என்னும் ஓவியர், பின்னர் இறுதியாக கோடிஸ்வரர் Dodi Fayed. 
 
Dodi Fayed-ருடன் காரில் செல்லும் போது தான் விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.