1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 12 அக்டோபர் 2017 (15:39 IST)

ஆப்பிரிக்காவில் இரத்தக்காட்டேறியால் ஊரடங்குச் சட்டம்

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவியில் இரத்தக்காட்டேறியால் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


 

 
ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் மலாவியில் பேய்கள் குறித்த வதந்திகள் அதிகளவில் பரவி வருகின்றன. முலான்ஜே மற்றும் பலொம்பி ஆகிய நகர மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளார். மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இரத்தக்காட்டேறிகள் என அப்பகுதி மக்கள் நம்பி வருகினேறனர்.
 
இதனால் அந்த பகுதியில் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளது. இரத்தக்காட்டேறிகள் என அப்பகுதி மக்கள் நம்பும் மாய உருவங்களிடம் அப்பகுதி மக்களை காப்பாற்ற சிறு குழு ஒன்றை அமைத்து இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.