செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 3 ஏப்ரல் 2021 (08:18 IST)

13.08 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு - அச்சுறுத்தும் உலக நிலவரம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13.08 கோடியை கடந்துள்ளது.  

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13.08 கோடியை கடந்துள்ளது.  
 
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10.52 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 28.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவியவர்களில் 2.26 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.