1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (22:10 IST)

இங்கிலாந்தில் ரிஷி சுனக்கை புதிய பிரதமராக்க கன்சர்வேட்டிவ் கட்சி திட்டம்!

rishi sunak
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை , லிஸ் டிரஸுக்குப் பதில் பிரதமராக்க எம்பிக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பதவி விலகிய நிலையில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் லிஸ் டிரஸ் ஆகியோர் போட்டியிட்டனர்

கடந்த ஜூலை  - செப்டம்பர் மாதங்களில், கன்சர்வேட்டின் கட்சி எம்பிக்கள் மற்றும் உறுப்புகள் இடையே வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குப் பதிவு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் டிரஸ் வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியான நிலையில் கருத்துக் கணிப்பில் ரிஷி சுனக்( 43%) அவர்களுக்கு பின்னடைவு  ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த  நிலையில், லிஸ் டிரஸ் வரிக்குறைப்பு  நடவடிக்கை எடுத்தார், இதற்கிடையே, 23 ஆம் தேதி  நிதி அமைச்சர் குலாலி இடைக்கால  பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதன் மூலம் சுமார் 4.15 லட்சம் கோடி வரிக்குறைப்பு செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து பிரதமர் மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கன்சர் வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் குரல் எழுப்பினர். ஆனால், இதுகுறித்து எவுதும் கூறாமல், நிதி அமைச்சரை பதவி நீக்கம் செய்தார் பிரதமர் லிஸ்டிரஸ்.

இந்த நிலையில், புதிய பிரதமரான லிஸ் டிரஸை பதவி நீக்கம் செய்துவிட்டு, ரிஷி சுனக்கை பிரதமாக்க வேண்டுமென கன்சர் வேட்டி கட்சி எம்பிக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj