1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (09:22 IST)

விண்வெளி நிலைய பணிகளை மேற்கொள்ள வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா

நாட்டின் புதிய விண்வெளி நிலையத்தை அமைக்க சீனா மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

 
நி ஹாய்ஷெங், லு பூமிங், டாங் ஹாங்போ ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் மூன்று மாதம் பூமியிலிருந்து 380கிமீட்டர் தூரத்தில் டியான்ஹே மாட்யூலில் தங்குவர். சீனாவின் விண்வெளி வீரர்கள் நீண்டகாலம் விண்வெளியில் தங்கவிருப்பது ஐந்து வருடங்களில் இதுவே முதல்முறை.
 
விண்வெளி தொடர்பான சீனாவின் அடுத்தடுத்த பணிகளில் மற்றொரு முயற்சிதான் இந்த வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய திட்டம். கடந்த ஆறு மாதங்களில் நிலாவிலிருந்து பாறை மற்றும் மண்ணின் மாதிரியை பூமிக்கு கொண்டுவந்தது, செவ்வாய் கிரகத்தில் 6 சக்கர ரோபோட்டை நிறுத்தியது என கடினமான செயல்களை நிகழ்த்தி காட்டியது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.