1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 8 செப்டம்பர் 2016 (15:10 IST)

யாரா இருந்தா என்ன? அழகா இருந்தா ரசிப்போம்: கலக்கும் இளைஞர்கள் பட்டாளம்

சீனாவில் நடைப்பெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பாதுகாப்பு ராணுவ பெண் அதிகாரி ஒருவரின் புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 

 

 
சீனாவில் நடைப்பெற்ற ஜி20 மாநாட்டில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டிற்காக சிறப்பு பயிற்சி பெற்ற ரானுவ அதிகாரிகள் இடம்பெற்றனர்.
 
அதில் ஒரு பெண் அதிகாரி ஷூ சின் என்பவரும் கலந்துக்கொண்டார். இவரது புகைப்படம் சீனாவில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
ஜி20 மாநாட்டில் உலக தலைவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் சீனாவின் சமூக வலைதளத்தில் இவரை பற்றிதான் அனைவரும் பேசி கொண்டிருந்தனர்.
 
அதன்பின்னர் இவர் குறித்து சில தகவல்களை அங்குள்ள பத்திரிக்கைகள் வெளியிட, வலைதளத்தில் இளைஞர்கள் அந்த பெண் அதிகாரி குறித்து கருத்துகளை வெளியிட தொடங்கியுள்ளனர்.
 
இதன்மூலம் அவருக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.