1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated: வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (23:43 IST)

தமிழ்நாட்டில் விரைவில் குழாய் மூலம் சமையல் கேஸ்: மத்திய அமைச்சர்!

gas
தமிழ்நாட்டில் விரைவில் குழாய் மூலம் சமையல் கேஸ்: மத்திய அமைச்சர்!
தமிழ்நாட்டில் விரைவில் குழாய் மூலம் சமையல் கேஸ் சப்ளை செய்யப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
மத்திய பெட்ரோலிய எரிவாயு மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ராமேஸ்வர் தேலி அவர்கள் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கெயில் நிறுவனம் மூலம் குழாய் வழியாக வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு திட்டம் நாடு முழுவதும் நடந்து வருகிறது என்றும் விரைவில் தமிழகத்திலும் இந்த திட்டம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 
கடந்த அதிமுக அரசு குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி தரவில்லை என்றும் தற்போது அதிமுக அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும் இதனால் விரைவில் பணி தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
 
 
Edited by Mahendran