புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 24 ஜூன் 2017 (16:27 IST)

மூன்றரை கி.மீ தூரம்; அசால்டாக சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர்

கனடா நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவரை சுமார் மூன்றரை கி.மீ தொலைவில் இருந்து சுட்டு வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். 


 

 
ஈராக் மொசூல் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க, கூட்டு ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இதில் கனடா நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் MCMillan TAC-50 என்ற வகை ரைபிளை கொண்டு சரியாக 3450 மீட்டர் தொலைவில் இருந்து தீவிரவாதி ஒருவரை சுட்டு வீழ்த்தியுள்ளார். 
 
இந்த செய்தியை கனடாவின் சிறப்பு ஆப்ரேஷன் கமாண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் தலிபான் தீவிரவாதிகள் இருவரை 2.4 கி.மீ தொலைவிலிருந்து சுட்டார். தற்போது கனடா வீரர் மூன்றரை கி.மீ தொலைவில் சுட்டு வீழ்த்தியது உலக சாதனையாக கருதப்படுகிறது.