திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 ஜூலை 2023 (21:07 IST)

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து-ஒரு வயது குழந்தை உள்பட 27 பேர் பலி!

Mexico
மெக்சிகோ நாட்டில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்தில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட அமெரிக்க நாடான மெக்சிகோ தலைநகர் நகரத்தில் இருந்து யோசோன்டுவாக்கு நோக்கி  நேற்று ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது.

அந்தப் பேருந்து  மாக்டலேனா பெனாஸ்கோ மகாணத்தில் காலை 6:30 மணிக்கு மலைப்பகுதியில் உள்ள  பள்ளத்தாக்கில் பேருந்து திடீரென்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

பேருந்தில் இருந்த பயணிகளில் கதறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று அவர்களை மீட்டனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், மீட்புப் பணிகள் ஈடுபட்டனர். கிரேன் மூலம் பேருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மொத்தம் ஒரு கைக்குழந்தை உள்பட மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில், 13 பேர் பெண்கள் எனவும்  13 பேர் ஆண்கள் எனவும் தக்வல் வெளியாகிறது.

இந்த விபத்து பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.