1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (14:32 IST)

பாலத்தின் மேல் மோதிய கப்பல்: அதிர்ச்சி வீடியோ!!

ஸ்பெயின் நாட்டில் பயணிகள் கப்பல் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலம் மீது மோதிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
The Naviera Armas என்ற கப்பல் பல்வேறு நாடுகளை சேர்ந்த 140 பயணிகள் பயணம் செய்துள்ளனர். துறைமுகத்தை விட்டு சில மைல்கள் தூரம் சென்றதும் திடீரென கப்பலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் மேற்கொண்டு பயணம் செய்யாமல் கப்பலை அதிகாரிகள் துறைமுகத்திற்கு திருப்பியுள்ளனர். ஆனால், கப்பலின் செயல்பாடு நின்றுபோனதால் கப்பலை கட்டுப்படுத்தி நிறுத்த முடியவில்லை.
 
இதனால், வேகமாக சென்ற கப்பல் வாகனங்கள் சென்றுக்கொண்டுருந்த பாலம் ஒன்றின் மீது பயங்கரமாக மோதி நின்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.