ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 25 ஏப்ரல் 2019 (11:07 IST)

ஓயாத வெடி சத்தங்கள்: இலங்கை நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 
 
தாக்குதலுக்கு இதுவரை 359 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். மேலும் 500 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  
 
குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட இருக்கிறார் இலங்கை அதிபர். அதையடுத்து நாளை மாலை 4 மணிக்கு சர்வசமயக் கூட்டமும் நடக்க இருக்கிறது.
இந்நிலையில், இன்று மீண்டும் இலங்கை நீதிமன்ற வளாகம் ஒன்றில் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொழும்பு புறநகர் பகுதியான புகொடை பகுதியில் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. 
 
இந்த குண்டுவெடிப்பினால் எந்தவொரு நபருக்கோ அல்லது சொத்துகளுக்கோ சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது ஆறுதலாக உள்ளது. 
 
நேற்று, கொழும்பு தியேட்டர் அருகே பைக்கில் வைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்புடன் வெடிக்க வைக்கப்பட்டது. 
 
அதற்கும் முன்னர் பேருந்தில் வெடிகுண்டு, விமான நிலையம் செல்லும் பாதையில் பைப் வெடிகுண்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.