1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 5 டிசம்பர் 2024 (17:02 IST)

ஒரு பிட்காயின் விலை ரூ.85 லட்சம்.. டிரம்ப் வெற்றியால் வரலாறு காணாத உயர்வு..!

கடந்த 2020 ஆம் ஆண்டு வெறும் 5 லட்ச ரூபாய் மதிப்பாக இருந்த பிட்காயின், இன்று 85 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, ஜனவரி 20ஆம் தேதி 47வது அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். அவரது வெற்றியை தொடர்ந்து அமெரிக்க பங்கு சந்தைகள் உயர்ந்தது மட்டுமின்றி தங்கம், வெள்ளி விலை என்னும் மாற்றம் ஏற்பட்டது. இதனை விட பிட்காயின் மதிப்பு தான் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. பிட்காயின் மதிப்பு ஒரு லட்சம் டாலரை தொட்டுள்ளதாகவும், இது இந்திய மதிப்பில் 85 லட்ச ரூபாய் எனவும் கூறப்படுகிறது.

முதல் முறையாக ஒரு லட்சம் அமெரிக்க டாலரை பிட்காயின் தொட்டுள்ளது, பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் தலைவராக பால் அட்கின்ஸ் என்பவரை டிரம்ப் நியமனம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து பிட்காயின் மதிப்பு உச்சத்திற்கு சென்று உள்ளது என புறப்படுதல் கூறப்படுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிட்காயின் மதிப்பு வெறும் இந்திய மதிப்பில் 5 லட்ச ரூபாயாக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து 2022 ஆம் ஆண்டு 32 லட்சம் என இருந்தது. 2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் வெறும் 36 லட்ச ரூபாய் என்று இருந்த பிட்காயின், இன்று திடீரென 85 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva