வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (05:13 IST)

ஐபோன்-6 வெடித்து வாலிபர் படுகாயம்

ஜபோன் 6 செல்போன் வெடித்த்தில் ஆஸ்திரோலிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
 

 
ஆஸ்திரேலியாவின் சிட்னி மாகாணத்தை சேர்ந்தவர் காரெத் க்ளியர் (36). இவர் கடந்த வாரம் மிதிவண்டியில் பயணம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறிய கீழே விழுந்துள்ளார்.
 
அப்போது அவரது பாக்கெட்டில் வைத்திருந்த ஐபோன்-6 செல்போன் வெடித்தது. இதனால் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இது குறித்து கூறியுள்ள அவர், ”மேலும், இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தை தொடர்பு கொண்டேன். இந்த அபாயம் குறித்து அந்நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.
 
லித்தியம் பயன்படுத்தப்பட்டுள்ள பேட்டரிகள், ஏதேனும் ஒரு பொருளுடன் மோதும் பொழுது வெடிக்கும் வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.