வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (07:38 IST)

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

இலங்கை அதிபர் தேர்தலின் பதிவான எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில்  தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 52.67% வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 
 
சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க 18.99% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு 21.79 வாக்குகள் கிடைத்துள்ளது.  
 
இலங்கை அதிபர் தேர்தலை பொருத்தவரை 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அடுத்த அதிபர் ஆவார் என்ற நிலையில் தற்போது 52 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க இலங்கையின் அடுத்த அதிபராகிறார் என்பதும்,  இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர் என்ற பெருமையையும் அநுர குமார திஸாநாயக்க பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்னும் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இறுதி தேர்தல் முடிவு இன்னும் சில நேரத்தில் சில மணி நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva