செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2022 (08:31 IST)

ஆயுதங்களை போட்டுட்டு அமைதி ஆகுங்கள்! – உண்ணாவிரதத்தில் இறங்கிய அல்-சதார்!

Iraq
ஈராக்கில் அல்-சதார் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த பொது தேர்தலில் அந்நாட்டின் ஷியா முஸ்லிம் மத தலைவரான முக்தாதா அல்-சதார் கட்சி 73 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் பெரும்பான்மை இல்லாததால் அக்கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

கூட்டணி ஆட்சி அமைக்க அல்-சதார் மறுத்த நிலையில் அவரது ஆதரவாளரான முஸ்தபா அல் கதாமி நாட்டின் இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டார். ஆனால் ஈரான் ஆதரவு கட்சிகள் வேறு ஒருவரை இடைக்கால பிரதமராக நியமிக்க கூறின. இதனால் ஏற்பட்ட குழப்பமான அரசியல் சூழலில் அல்-சதார் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

இதனால் கோபமடைந்த அல்-சதாரின் ஆதரவாளர்கள் ஈராக்கில் பல பகுதிகளில் வன்முறைகளை நடத்தியுள்ளனர். பாக்தாத்தில் அல்-சதார் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 30 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயம்பட்டுள்ளனர். அங்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் அனைவரும் ஆயுதங்களை விடுத்து அமைதியை நீடிக்க செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து அல்-சதார் உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ளார்.