வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2024 (16:10 IST)

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: ஈரான், ஆப்கன் எல்லைகளை மூட உத்தரவு..!

பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான எல்லைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
பாகிஸ்தானில் இன்று தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று திடீரென பலுசிஸ்தான் மாகாணத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து பாகிஸ்தானை சுற்றி உள்ள நாடுகளின் எல்லைகளை, குறிப்பாக ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான எல்லைகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
இன்று காலை 8 மணிக்கு பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி இதுவரை அமைதியாக நடைபெற்று வருவதாகவும் நாடு முழுவதும் 65,000 வீரர்கள் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
இதுவரை தேர்தல் நாளில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை என்றும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 
இன்று மூடப்படும் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran