1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 30 ஜூலை 2016 (09:27 IST)

வேறு ஆணுடன் தொடர்பு: கணவர் அடித்த அடியில் பெண்ணின் கருவே கலைந்தது!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண் ஒருவர் வேறு ஒரு நபருடன் தொடர்பு வைத்திருந்தார் என சந்தேகப்பட்ட கணவர், அந்த பெண்ணை தாக்கியதில் அப்பெண்ணின் 6 மாத கர்ப்பம் கலைந்தது.


 
 
அஸ்காமிக்ஸ் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் கலீல் அசீர் என்பவருக்கு தன்னுடைய மனைவி வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்ற சந்தேகம். இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது மனைவியை கட்டையால் தாக்கி உள்ளார், அவரது தலை முடியை அறுத்துள்ளார். இதானல் 6 மாத கர்ப்பிணியாக இருந்த அவரின் கரு கலைந்துவிட்டது.
 
மேலும் அப்துல் கலீல் அசீரின் தாயும் அவரது சகோதரியும் அந்த பெண்ணை கட்டி வைக்க, அவர் கொடூரமாக அவரை தாக்கியுள்ளார். கடுமையாக தாக்கப்பட்ட அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்துல் கலீல் அசீர் ஏற்கனவே மனைவியின் மூக்கையும் அறுத்துள்ளார்.
 
கணவரின் இந்த கடுமையான தாக்குதலுக்கு அந்நாட்டு மகளிர் விவகாரத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அப்துல் கலீல் அசீரின் தாயையும், சகோதரியையும் கைது செய்துள்ள காவல்துறை அப்துல் கலீல் அசீரை தேடி வருகின்றனர்.