திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (11:56 IST)

காபூல் தாக்குதல்; பாகிஸ்தான் காரணம்: அதிர்ச்சி தகவல்!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய மற்றும் ஜெர்மனி தூதரங்கள் அமைந்துள்ள பகுதியில் நேற்று வெடிகுண்டு விபத்து நடந்தது.


 
 
இந்த தாக்குதலில் 90 பேர் பரிதாபமாக பலியாகினர் என்றும் 300-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
இந்த தாக்குதலுக்கு பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ஐ.எஸ் அமைப்பு அல்லது தாலிபான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகப்பட்ட நிலையில், இதனை பாகிஸ்தான் செய்திருக்ககூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
பாகிஸ்தானில் இயங்கும் ஹக்கானி தீவிரவாத குழுவும், அந்நாட்டு உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யும் காரணம் என ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து பாகிஸ்தான் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.