வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2016 (22:03 IST)

அட்டைப்படத்தில் முதன்முறையாக மூன்றாம் பாலின சிறுமி புகைப்படம்

நேஷ்னல் ஜியோகிரஃபிக் இதழின் அட்டை படத்தில் முதன்முறையாக 9 வயது மூன்றாம் பாலின சிறுமியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.



நேஷ்னல் ஜியோகிரஃபிக் வெளியிட்டும் ஒவ்வொரு ஆண்டின் சிறப்பு இதழில், அதன் அட்டை பக்கத்தில் ஏதாவது முக்கியத்துவம் வாய்ந்த அல்லது அந்த ஆண்டின் பிரபலமான புகைப்படம் இடம்பெறும்.

அந்த வகையில் 1985ஆம் இதழின் அட்டை படத்தில் இடம்பெற்ற பச்சை நிற ஆப்கான் அகதி பெண்ணின் புகைப்பட்ம் உலகத்தை திரும்பி பார்க்க வைத்தது. அதன்பிறகு தற்போது 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் இதழின் அட்டை படத்தில் முதன்முறையாக 9 வயது மூன்றாம் பாலின சிறுமியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

சிறுமியின் பெயர் ஏவரி ஜாக்சன், இவர் பிங்க் நிற உடையில், பிங்க் நிற கூந்தலுடன் சாய்ந்து அமர்ந்திருக்கும் புகைப்படம் தான் இடம்பெற்றுள்ளது. கடந்த 128 ஆண்டுகளில் நேஷ்னல் ஜியோகிரஃபிக் இதழின் அட்டை படத்தில் ஒரு திருநங்கை இடம் பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.