390 கோடி மைல் பயணம்; விண்கல் மண்ணை கொண்டு வந்த நாசா விண்கலம்!
விண்கல் ஆய்வுக்காக நாசா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக ஒரு விண்கல்லில் இருந்து மண் துகள்களை சேகரித்து திரும்பியுள்ளது.
விண்வெளி ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நிலவு, செவ்வாய் உள்ளிட்ட கோள்கள், துணைக் கோள்களை ஆய்வு செய்து வருவது போல விண்கற்கள், விண் மண்டலத்தில் உள்ள ஏனைய பொருட்களையும் ஆய்வு செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
அவ்வாறாக பூமியில் இருந்து சுமார் 390 கோடி மைல்கள் தொலைவில் உள்ள பென்னு என்ற விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்து வர கடந்த 2016ம் ஆண்டு நாசா OSIRISREx என்ற விண்கலத்தை அனுப்பியது பல ஆண்டுகள் பயணித்து பென்னுவை அடைந்த ஒசிரிஸ் ரெக்ஸ் அந்த விண்கல்லில் இருந்து சுமார் 250 கிராம் மண் துகள்களை சேகரித்துக் கொண்டு மீண்டும் பூமிக்கு திரும்பியது.
இன்று இந்த விண்கலம் பூமியை வந்தடைந்துள்ளது. விண்கல்லில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள மண் துகள்கள் சுமார் 450 கோடி ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. இந்த ஆய்வின் மூலம் கோள்களின் உருவாக்கம் பற்றி அறிந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
Edit by Prasanth.K