சின்ன பையனுடன் ஓடிப்போன 3 குழந்தைக்கு தாயான பெண்!

சின்ன பையனுடன் ஓடிப்போன 3 குழந்தைக்கு தாயான பெண்!


Caston| Last Modified சனி, 3 டிசம்பர் 2016 (15:13 IST)
இலங்கையின் கொழும்புவில் 38 வயதான பெண் ஒருவர் தன்னை விட சின்ன பையனான 23 வயதான இளைஞனுடன் காதல் கொண்டு வீட்டை விட்டு ஓடிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளன.

 
 
கொழும்புவில் 38 வயதான பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைகளிடம் வெளியில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு 23 வயது பையன் ஒருவனுடன் வீட்டை விட்டு ஓடிச்சென்றுள்ளார். அவருக்கு 15 வயதில் ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
 
இதனையடுத்து வெளியில் சென்ற தாய் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குழந்தைகள் அருகில் உள்ளவர்களிடம் கூறியுள்ளனர். அவர்கள் அந்த பெண்ணின் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய போது, தான் இனிமேல் வர மாட்டேன். என்னுடைய குழந்தைகளை கணவரின் பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுங்கள் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
 
அவர்கள் உடனடியாக அவரின் கணவரிடம் சம்பவத்தை கூறினர். அவர் உடனடியாக அவரது பெற்றோரை தொடர்பு கொண்டு குழந்தைகளுடன் இருக்குமாறு கூறியுள்ளார். பின்னர் காவல்துறையினரிடம் இது குறித்து புகார் அளித்தார். அவர்கள் நடத்திய விசாரணையில் அந்த பெண் 23 வயதான பையனுடன் ஓடிச்சென்ற தகவல் தெரியவந்தது.
 
ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்து வந்த அந்த பையனுக்கு ஒரு காதலி உள்ளார். அவர்கள் இருவரும் சந்திப்பதற்காக இந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
 
தற்போது தலைமறைவாகி உள்ள 23 வயது அந்த பையனையும் 38 வயதான அந்த பெண்ணையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :