1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2023 (13:32 IST)

ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்: ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 260 உடல்கள்..!

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒரே இடத்தில் 260 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் நாடு தெரிவித்துள்ளது.
 
இஸ்ரேலில் நடைபெற்ற இசை விழாவில் பங்கேற்ற நிலையில் அந்த இடத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் 260 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
 
இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமை காலை 8 மணி தொடங்கி 2 மணி நேரத்தில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.  ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நகருக்குள் புகுந்து பொதுமக்களை நோட்டு சரமாரியாக சுடப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின. 
 
இந்த நிலையில் நேற்று இஸ்ரேலில் ஒரு  இசை நிகழ்ச்சி நடந்த நிலையில் தீவிரவாதிகள் நிகழ்ச்சி நடந்த இடத்தில் தாக்குதல் நடத்தினர். இந்த இசைநிகழ்ச்சி நடந்த இடத்தில் 260 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இசைநிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பலர் அதிர்ச்சியடைந்து உயிரை காப்பாற்ற தப்பித்து ஓடியதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran