1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (12:15 IST)

கடற்கரையில் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்: மயங்கிய நிலையில் விட்டு சென்ற வெறியன்!

கடற்கரையில் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்: மயங்கிய நிலையில் விட்டு சென்ற வெறியன்!

ஸ்பெயின் நாட்டில் டோரியன் கடற்கரையில் பெனிகேஸ்ஸிம் என்னும் இசை திருவிழா நடந்த பகுதிக்கு அருகில் 21 வயதான பிரிட்டனை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மர்ம நபர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் 21 வயதான இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு மயக்க நிலையில் கடற்கரை ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
 
பாதிக்கப்பட்ட பெண் அன்று மது அருந்தியிருந்ததால் அன்று நடந்த சம்பவம் குறித்து அவருக்கு நினைவில்லை. மேலும் போலீசாருக்கு அவரால் போதுமான தகவல்களையும் அளிக்க முடியவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடைகளை ஆய்வு செய்த போலீசார் பலாத்காரம் நடைபெற்ற கடற்கரை பகுதியில் தடயவியல் ஆதாரங்களையும் சேகரித்தனர்.
 
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவை ஸ்பெயினை சார்ந்தவராக இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து அந்த சந்தேக நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.