பஞ்சத்தில் சுமார் 2 கோடி பேர் பஞ்சாய் போக நேரிடும்: இந்நிலைக்கு காரணம் என்ன??
நைஜீரியா, சோமாலியா, ஏமன் ஆகிய மூன்று நாடுகளிலும் தெற்கு சூடானிலும் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது.
இந்த 4 நாடுகளிலும் சுமார் 2 கோடி பேர் போதிய உணவின்றி விரைவில் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பஞ்சத்தின் பெரும் பகுதி மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாய் உள்ளது.
உலகின் ஆறு நாடுகளை எல்லையாகக் கொண்டது தெற்கு சூடான். உலகின் மிகவும் வளர்ச்சியடையாத நாடுகளில் இதுவும் ஒன்று. ஆனால், தெற்கு சூடான் கலவரங்களால் சூழப்பட்டிருக்கிறது.
அரசுக்கு எதிராக போராட்டங்கள் நியாயமான காரணங்கள், நியாயமற்ற காரணங்கள் ஆகிய இரண்டுக்காகவும் புரட்சி வெடித்துக் கொண்டிருக்கின்றன.
இதனால் விவசாயிகள் போராளிகள் ஆகிறார்கள். இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. போராளிகள் ஆகாத விவசாயிகளும், கலவரங்கள் காரணமாக விவசாயம் செய்ய முன்வருவதில்லை.
வரும் ஜூலை மாதத்துக்குள் நாலு பில்லியன் டாலர் (ரூ.26,500 கோடி) மதிப்புள்ள உணவுப் பொருட்கள் தெற்கு சூடானுக்கு அனுப்பி வைக்காவிட்டால் பட்டினிச் சாவுகள் மிக அதிகளவில் நிகழும் என்கிறது ஓர் அறிக்கை.