பேஸ்புக்கில் நிர்வாணப்படம்: உயிர்த்தோழியை 65 முறை குத்திக் கொன்ற இளம்பெண்

Suresh| Last Updated: புதன், 2 ஏப்ரல் 2014 (10:34 IST)
இங்கிலாந்தில் பேஸ்புக்கில் தனது
நிர்வாணப்படத்தை பதிவேற்றம் செய்த தோழியை 16 வயது இளம்பெண் எலிசபெத் 60 க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி கொன்றுள்ளார்
இங்கிலாந்தில் வசித்து வந்த 16 வயது இளம்பெண் இரான்டி எலிசபெத் குட்டியரேஸ், மெக்சிகோவில் வசித்த அனில் பையேஸ் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்தனர். இருவரும் பேஸ்புக் மூலம் தகவல்களை அடிக்கடி பரிமாறிகொண்டனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் நிர்வாணமாக இருந்த படங்களை பேஸ்புக்கில் அனில் பையேஸ் பதிவேற்றம் செய்துள்ளார். இதையறிந்த எலிசபெத் மிகவும் கோபமடைந்தார்.

இந்த ஆண்டு இறுதிவரை அனில் பையேஸ் உயிருடன் இருந்தால், அவர் அதிர்ஷ்டம் செய்தவராவார் என்றும் எலிசபெத் இணையதளத்தில் தகவல் அனுப்பியுள்ளார்.ஆனால் அவரது அச்சுறுத்தலான செய்தியை நகைச்சுவையாக எடுத்துக்கொண்ட பையேஸ் இதனை சரிசெய்துகொள்ள மெக்சிகோவில் உள்ள தங்களது வீட்டிற்கு வரும்படி எலிசபெத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அழைப்பை ஏற்று அங்கு சென்ற எலிசபெத் 60 க்கும் மேற்பட்ட முறை அனில் பையேஸின் முதுகில் கத்தியால் குத்தி அவரை கொன்றுள்ளார். அதன்பின் தனது உடை மற்றும் கத்தியிலிருந்த ரத்தத்தைத் துடைத்துவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. பின்னர் தோழியின் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த எலிசபெத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :