செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By
Last Updated : சனி, 1 செப்டம்பர் 2018 (18:56 IST)

மனநலம் பாதிக்கப்பட்ட நடிகையை சுட்டுக் கொன்ற போலீஸார்

பொம்மை துப்பாக்கியை காட்டிய மிரட்டிய மனநலம் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகையை காவல்துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
பிரபல ஹாலிவுட் நடிகை வெனஸா மார்குயஷ் சமீப காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இவரது வீட்டு உரிமையாளர் காவல்துறையினருக்கு போன் செய்து நடிகை தன்னை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டுகிறார் என்று புகார் அளித்துள்ளார்.
 
காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு நடிகை தனது கையில் இருந்த துப்பாக்கியால் காவல்துறையினரையும் சுட முயற்சித்துள்ளார். இதனால் தற்காப்பு நடவடிக்கைக்காக காவல்துறையினர் அந்த நடிகையை துப்பாக்கியால சுட்டனர்.
 
இதில் அந்த நடிகை பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த நடிகையிடம் இருந்த துப்பாக்கியை கைப்பற்றிய காவல்துறையினருக்கு அது பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.