திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By

முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய சில அடிப்படை வாஸ்து விதிகள் என்ன தெரியுமா...?

வாஸ்துவில் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய சில அடிப்படை உள்ளது. ஒரு வீடோ அல்லது தொழில் நிறுவனமோ அமைக்கப்படும்போது அதனை வாஸ்து விதிகளுக்கு உட்படுத்தி அமைப்பது சிறந்தது.
ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம்.
 
ஒரு கட்டடம் கட்டுபோது தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட, வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் அவசியம்.
 
ஒரு இடத்திற்கு அமைக்கப்படும் தலைவாசல் கட்டாயம் உச்சத்தில் தான் இருக்க வேண்டும்.
 
உட்புற மற்றும் வெளிப்புற படிக்கட்டுகள் அமைக்கப்படும் நிலையை அறிவது அவசியம்.
 
ஒரு இடத்தின் தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம் பற்றி அறிவது அவசியம். நம் அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் வெவ்வேறு  இடத்திற்கு செல்ல ஒவ்வொருவரும் வாகனங்கள் பயன்படுத்துகின்றோம். நாம் வசிக்கும் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக தனி  இடத்தை அமைக்கின்றோம். அவ்வாறு அமைக்கப்படும் இடத்தை வாஸ்துப்படி சரியான முறையில் அமைக்க வேண்டும்.
 
ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் எந்த பகுதியையும் உடைத்து போர்டிகோ அமைக்க கூடாது. ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை மேல்கூரை சம்மாக அல்லது தெற்கு / மேற்கு உயர்த்தியும் வடக்கு / கிழக்கு தாழ்த்தியும்  அமைக்க வேண்டும்.