வியாழன், 14 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By
Last Modified: ஞாயிறு, 4 மார்ச் 2018 (13:10 IST)

ஒரு வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரப்படி எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது.



ஒரு சிலர் 3 வாசல் வைத்து வீடு அமைப்பார்கள். இதில் ஒவ்வொரு வாசலும் எந்த திசையில் உள்ளது என்பதை அறிய வேண்டும். முடிந்த வரை கிழக்கு, மேற்கு, வடக்கு திசையில் வாசல்கள் அமைப்பது நலம். தெற்கு பகுதியில் வாசல் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால் வாஸ்து பார்த்து அதனை அடைக்கலாம்.

தென்கிழக்கு, தென்மேற்கில் வாசல் அமைக்கக் கூடாது. ஒரு சில வீடுகளில் 100% தெற்கில் வாசல் அமையும். அதனால் அவ்வளவு பாதிப்பு ஏற்படாது.