1. இதர வாசிப்பு
  2. »
  3. குழந்தைகள் உலகம்
  4. »
  5. பொது அறிவு

அலஹாபாத்தின் சிறப்பு

அலஹாபாத்தின் சிறப்பு
ஒ‌வ்வொரு நகர‌த்‌தி‌ற்கு‌ம் ப‌ல்வேறு ‌சிற‌ப்புக‌ள் உ‌ண்டு. அத‌ன்படி அலஹாபா‌த் நகர‌த்‌தி‌ற்கு எ‌ன்று ‌சில ‌சிற‌‌ப்புக‌ள் உ‌‌ண்டு. அவை..

இந்தியாவின் நேர நிர்ணய அமைப்பு (ஐஎஸ்டி) இந்நகரில்தான் அமைந்துள்ளது.

இந்தியாவின் முதல் விமானம் அதாவது 1910ம் ஆண்டில் இந்நகரத்தில் இருந்துதான் பறந்தது.

கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து இந்தியாவை ஆட்சி செய்யும் அதிகாரத்தை தாமே எடுத்துக் கொள்ளும் விக்டோரியா மகாராணியின் பிரகடனத்தை கானிங் பிரபு இந்நகரில் தான்வாசித்தார்.

இந்நகரில் பிறந்த இரண்டு பேர் இந்தியப் பிரதமர்களாகியுள்ளனர்.

கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் புனித சங்கமும் இந்நகரில்தான் உள்ளது.

கடவுளின் நகரம் என்று அக்பரால் புகழப்பட்ட நகரமும் அலஹாபாத் தான்.
About Writer
Webdunia