நடிகை குஷ்பு மீது போலீசார் திடீர் வழக்கு
நடிகை குஷ்பு மீது போலீசார் திடீர் வழக்கு
அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் செய்த, நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பளருமான குஷ்பு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பளருமான குஷ்பு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது, கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் மற்றும் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணியை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் வாக்கு ச்சேகரித்தார்.
இந்த நிலையில், குழித்துறை பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய நடிகை குஷ்பு முறையாக அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து விளவங்கோடு தேர்தல் பார்வையாளர் டேவிட் ஜெபசிங் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் நடிகை குஷ்பு, விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணி ஆகியோர் மீது , போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.